ஆபரேஷன் சிந்தூர் குறித்து நிருபர் கேள்வி: ''மேற்கொள்ள வேண்டிய தேவையான விசயங்கள் எதுவும் அவைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட வேண்டும்'' என கமல்ஹாசன் பதில்..!
Kamal Haasan response to a reporters question about Operation Sindoor
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதம் நடந்து வருகின்றது.
நேற்று ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர், சரியான கேள்விகளை கேட்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் மேலும் கூறியுள்ளதாவது: பொது விவகாரங்கள் பற்றி அரசிடம் முக்கிய கேள்விகளை கேட்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலை. ஆனால், நம்முடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நம்முடைய விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன? என கேள்வி கேட்கின்றனர். நம்முடைய படையினர் பாகிஸ்தானின் எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தினர் என ஒருபோதும் கேட்கவேயில்லை என குறிப்பிட்டார்.
-ecez6.png)
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசனிடம் ஆபரேஷன் சிந்தூர் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர், பதிலளிக்கையில் கூறியதாவது: மேற்கொள்ள வேண்டிய தேவையான விசயங்கள் எதுவும் அவைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசிய ராஜ்நாத் சிங், லட்சியம் பெரிய அளவில் இருக்கும் போது, சிறிய விவகாரங்களில் நாம் கவனம் செலுத்த கூடாது என்றும், ஏனெனில், அதில் நாம் கவனம் செலுத்தும்போது, தேச பாதுகாப்பில் இருந்து நம் கவனம் திசை திரும்பி விடும் என நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Kamal Haasan response to a reporters question about Operation Sindoor