மாநகரம் ஸ்ரீ விஷயம் என்னாச்சு.. என்ன நடக்கும்னு சொல்ல முடியாது.. உண்மையை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்!
What up with the city of Sri It impossible to say what will happen Lokesh Kanagaraj revealed the truth
தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் போன்ற தரமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துத் தன்னம்பிக்கையான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகர் ஸ்ரீ, சமீப காலமாக சினிமாவில் இருந்து மறைந்திருந்தார். ஆனால், அவர் வெளியிட்ட சில வீடியோ, புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அவர் சிக்கியிருந்த மன அழுத்த நிலையை வெளிக்கொணர்ந்தது.
இந்நிலையில், ஸ்ரீயை மீட்ட நிகழ்வுகள், திரை உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறின. குறிப்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நண்பராக, மனிதநேயத்தோடு செயலில் இறங்கி, ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிய சம்பவம், அனைவரையும் நெகிழ வைத்தது.
இப்போது, ஸ்ரீயின் நிலைமை சீராகி வருகிறது. அவர் இன்ஸ்டாகிராமில் மீண்டும் சுறுசுறுப்பாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார். மேலும், விரைவில் ஒரு புத்தகத்தை வெளியிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஸ்ரீ குறித்து உணர்ச்சிவயப்பட்ட கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது:“ஸ்ரீ இப்போது நன்றாக இருக்கிறார். ஒரு வீடியோ காலில் புத்தகம் வெளியிடப்போகிறேன் என்றார். சரி, பிளான் பண்ணி செய்யலாம் என்றேன். ஆனா அவர் ‘இல்ல மச்சான் உடனே செய்யணும்’னு சொன்னார். அதுக்கு சரி சொன்னேன்.”
லோகேஷ் மேலும் விளக்கினார்:“இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு வீடியோ போட்டதும், ‘ஸ்ரீயை கவனிக்கலையே’னு என்னையுமே திட்டினாங்க. அதனால்தான் நான் சோஷியல் மீடியாவிலிருந்து விலகினேன். தினமும் நம்ம எதுக்கும் விளக்கம் சொல்ல முடியாது. ஸ்ரீயின் வாழ்க்கை அவருடையது. அவருக்கென்று குடும்பம் இருக்கிறது.“நாங்க நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும், எல்லாத்தையும் கேமரா முன்னாடி பேச முடியாது. அவரும், அவர் குடும்பமும் என்னென்ன கஷ்டப்படுது என்று வெளியே சொல்ல முடியாது. அவருக்குத் தான் முழுமையான குணமடைந்த பிறகு, யாரெல்லாம் என்ன பேசினாங்கன்னு தெரியும். அதனால் ஸ்ரீயைப் பற்றி பேச நான் தயங்குறேன்.”
மேலும், சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விமர்சனங்கள் குறித்து அவர்:“என்னை, எஸ்.ஆர்.பிரபுவை திட்டினாங்க. இந்தப் பிரச்சனை நடக்கும்போதே நா ஷூட்டிங் பண்ணனும், ஸ்ரீயையும் கவனிக்கனும். அதனால்தான் சோஷியல் மீடியாலிருந்து விலகிட்டேன். நாங்க ஒருவருக்கொருவர் உதவி செய்றோம். நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.”
இந்த பேட்டியில், ஒரு மனிதராக, நண்பராக, ஸ்ரீக்கு ஆதரவாக துணைநின்ற லோகேஷ், சமூகத்தில் சில விசயங்களை பேசாமல் அமைதியாக செய்வதன் நுண்ணிய முறைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறார். ஸ்ரீ மீண்டும் வாழ்வை தைரியமாக எதிர்கொண்டு நடிப்புலகிற்கு திரும்பி வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
English Summary
What up with the city of Sri It impossible to say what will happen Lokesh Kanagaraj revealed the truth