ஆடிப்பூரத் திருவிழா..அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள்!
Aadipura Thiruvizha Women perform the valai kaapu ceremony for the goddess
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நன்மை தருவார்கள் திருத்தலத்தில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு சர்வ சக்தி மாகாளியம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள் வழிபட்டனர்.
ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதுகின்றனர். அப்படி அந்த மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் பல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது அவர்களை நம்பிக்கை, அதுமட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவர். அதேபோல் தமிழக முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
அப்போது பூஜைகளும் ஏராளமான நிகழ்வுகளும் நடைபெறும், இந்த நிலையில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நன்மை தருவார்கள் திருத்தலத்தில் சர்வ சக்தி மாகாளியம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள் வழிபட்டனர்.
தேனி மாவட்டம் மதுரை -கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சக்கம்பட்டியில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் அமைந்துள்ள 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மனுக்கும், ஆதிபராசக்திக்கும் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் சர்வ சக்தி மாகாளியம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் ,அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் ,மாங்கல்யம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாள் முழுவதும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் முத்து வன்னியம் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.
English Summary
Aadipura Thiruvizha Women perform the valai kaapu ceremony for the goddess