தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்: ஜனவரி 1 முதல் நடைமுறை - அரசாணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (Guaranteed Pension Scheme) மீண்டும் அமல்படுத்தியுள்ளார். இத்திட்டம் கடந்த ஜனவரி 1, 2026 முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வருவதாகத் தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

ஓய்வூதியத் தொகை: ஓய்வு பெறும் ஊழியர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக உறுதி செய்யப்படும். இதில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.

அகவிலைப்படி (DA) உயர்வு: அரசுப் பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கும் 6 மாதத்திற்கு ஒருமுறை முறையாக வழங்கப்படும்.

குடும்பப் பாதுகாப்பு: ஓய்வூதியதாரர் இயற்கை எய்தினால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் அவரது குடும்பத்தினருக்கு ‘குடும்ப ஓய்வூதியமாக’ வழங்கப்படும்.

பணிக்கொடை (Gratuity): ஓய்வு பெறும்போதோ அல்லது பணிக்காலத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிடும்போதோ, பணிக்காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்: ஒரு ஊழியர் தனது முழுப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும், அவருக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைப்பது இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த அதிரடி அறிவிப்பு, அரசுப் பணியாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Guaranteed Pension Scheme Implementation from Jan 1st


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->