அம்மா மினி கிளினிக் மூடுவிழா: முற்றிலும் திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி - எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்.! - Seithipunal
Seithipunal


Edappadi K Palaniswami
சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அம்மா மினி க்ளினிக்குகள் என்பது ஒரு தற்காலிக அமைப்பு, அவை மூடப்பட்டுவிட்டன. அதில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்களும் எந்த பணியிடை நீக்கமும் இல்லாமல், கொரோனா சிகிச்சைப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்னர்" என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுவதாக, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. 

ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது." என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVT SAY AMMA MINI CLINIC CLOSSE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->