தமிழக அரசின் "ஆர்ஆர்ஆர்" திட்டம் விரைவில்.! என்ன அது "ஆர்ஆர்ஆர்" திட்டம்?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழு ஏரிகளையும் தூர் வருவதற்கு ஆர் "ஆர்ஆர்ஆர்" என்ற புதிய திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணர்வுப் பூங்காவை, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கையில்,

"ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை தற்போது மாற்றி அமைத்துள்ளனர்.

இந்த பூங்காவை எனது பேரக்குழந்தைகள் பார்வையிட்ட பின்னர், என்னை சென்று பார்வையிட வேண்டும் என்று எனக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி நான் இங்கு வந்து பார்த்தபோது, இந்த பூங்கா அற்புதமாக அமைந்துள்ளது.

இந்த பூங்காவை, அதிமுக ஆட்சிக் காலத்தில் சீர் செய்ய வேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது இந்த பூங்கா 2.23 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றதா என்ற கேள்வி இருக்கிறது. திமுக அந்த பணிகளை செய்து வருகிறது.

அனைத்து ஏரிகளையும் தூர் வருவதற்கு என்று ட்ரிபிள் ஆர் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn govt rrr


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->