'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை; இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட முதல் 'பெய்லி' பாலம் திறப்பு..!
The first Bailey bridge built in Sri Lanka with Indian financial assistance has been inaugurated
'டிட்வா' புயல் கோரத்தாண்டவத்தால் நமது அண்டைய தீவு நாடான இலங்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவிய சீற்ற காலநிலை காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் காணமால் போனதோடு, வீடுகளை இழந்த மக்கள் துயரத்தில் வாடுகின்றனர்.
'டிட்வா'புயல் பாதிப்பின் போது இந்தியா, 'ஆபரேஷன் சாகர்பந்து' மூலம் இலங்கைக்கு உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொண்டது. அதனைத்தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கைக்கு 45 கோடி டாலர் நிதியுதவித் தொகுப்பு வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்ததோடு, இதில் 35 கோடி டாலர் சலுகை கடன் அடிப்படையிலும், 10 கோடி டாலர் மானியமாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இடையே முக்கியப் போக்குவரத்து இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினர் உதவியுடன் 100 அடி நீளம் கொண்ட முதல் பெய்லி பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா. இலங்கை போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வித்துறை இணையமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்தப் பாலம், பொதுமக்கள் நடமாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் மற்றும் பிராந்தியத்தில் பிர உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அத்தியாவசிய போக்கு வரத்துக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும்.
228 டன் எடையுள்ள 04 பெய்லி பாலங்கள், சி-17 குளோப் மாஸ்டர் என்ற 04 விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன், 48 இந்திய ராணுவ வீரர்களைக் கொண்ட பொறியியல் பணிக்குழுவும் இலங்கைக்குசென்றுள்ளனர். அங்கு மத்திய மலையில் தலைநகரான கண்டியில் இருந்து -ராகலை சாலையில் மற்றொரு பெய்லி பாலம் விரைவில் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை வரும் 15-க்கும் மீட்டெடுக்க வாரங்களில் மேற்பட்ட கூடுதல் பெய்லி பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
The first Bailey bridge built in Sri Lanka with Indian financial assistance has been inaugurated