பள்ளிகளுக்கு 05 நாட்கள் பொங்கல் விடுமுறை; முதல்வர் அறிவிப்பு..!
The Chief Minister has announced a 5 days Pongal holiday for schools
ஜனவரி 14-ஆம் தேதி போகிப்பண்டிகை முதல் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த தை பொங்கல் பண்டிகையில், புத்தாடை அணிவது, சூரியன், மாடு என இயற்க்கைக்கு பொங்கல் வைப்பது, ஜல்லிக்கட்டு முதலிய வீர தீர விளையாட்டுகள் விளையாடுவது என பண்டிகை களைகட்டும்.
வழமைபோலவே இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் செல்ல சிறப்பு பேருந்துகள், சிறுப்பு ரயில்கள் என அரசால் இயக்கப்படுகின்றன. பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களும், வீட்டில் இருக்கும் பள்ளி மாணவர்களுடனும், குடும்பத்துடனும் பொங்கல் பண்டிகையை கொண்டாட அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை மட்டுமே அரசு விடுமுறை இருக்கும் நிலையில், தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் 05 நாட்கள் விடுமுறை என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வர் இந்த அறிவிப்பின் படி, ஜனவரி 14ஆம் தேதியான போகிப்பண்டிகை முதல் 18ஆம் தேதியான உழவர் திருநாள் மறுநாள் வரை மொத்தம் 05 நாட்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Chief Minister has announced a 5 days Pongal holiday for schools