நகைக் கடைகளுக்கு முகத்தை மூடிய ஹிஜாப் அணிந்து வரத் தடை..? தமிழக அரசு விளக்கம்..!
The Tamil Nadu government has issued a clarification regarding the news about the ban on wearing hijabs to jewellery shops
பீஹாரில் நகைக்கடைகளுக்கு வரும் பெண்கள் முகத்தை மூடி வர தடை விதிக்கப்பட்ட்டுள்ள நிலையில், உ.பி. வாரணாசியிலும் ஹிஜாப் அணிந்து நகைக்கடைகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சூழலில், தமிழகத்தில் நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
'பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்' என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால், நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. தவறான தகவலைப் பரப்பாதீர்!' என்று தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

English Summary
The Tamil Nadu government has issued a clarification regarding the news about the ban on wearing hijabs to jewellery shops