'அண்ணா வடிவில் இன்றைக்கு முதலமைச்சர் இருக்கிறார்; அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அழிக்க முடியாது'; உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
Udhayanidhi Stalin said that the fire ignited by Anna cannot be extinguished by anyone
இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தமிழ்நாடு இந்தி திணிப்பை எதிர்க்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
இங்கு ஒரு வரலாறை இங்கே சொல்ல விரும்புகிறேன். 1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆன போது ஒரு வேலையை செய்தார். அதைப் பற்றி சட்டசபையிலும் பேசி பதிய வைத்திருக்கிறார். சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையே தவிர, தமிழ்நாட்டில் எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி கிடையாது என்றார்.தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்' என்று தெரிவித்துள்ளார். அதற்கு முன்பு வரை சென்னை பிரசிடென்ஸி என்று இருந்தது. இதை மூன்றையும் செய்துவிட்டு அண்ணா சொன்னார், நான் ஆட்சியில் இருப்பதனால் இந்த மூன்று திட்டத்தையும் அமல்படுத்தினேன்.

பிற்காலங்களில், யாராவது இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் மனதில் பயம் வரும். அந்த பயம் இருக்கும் வரை இந்த தமிழ்நாட்டை ஆள்வது அண்ணாதுரைதான் என்றார் என்று துணை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நம் அண்ணா வடிவில் இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அழிக்க முடியாது என்று உதயநிதி மேலும், தெரிவித்துள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin said that the fire ignited by Anna cannot be extinguished by anyone