ஓபிஎஸ்-க்கு இன்று மரண அடி நிச்சயம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் அதிரடி மனு! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கை தற்போது ஓங்கி இருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட முதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசும், எடப்பாடி பழனிசாமியும் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. 

மேலும், ஓ பன்னீர் செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தமிழக அரசு சார்பாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ஓபிஎஸ்-க்கு எதிராக பல்வேறு விஷியன்கள் அடைங்கியுள்ளன.

அந்த மனுவில், "பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால், அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஓ பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று. தமிழக அரசு கூறியிருப்பது, ஓபிஎஸ்-க்கு பெரும் அடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், "ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளார். அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றுள்ளார். 

ஓ பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். மேலும் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் ஜனநாயக பூர்வமான தலைமை மாற்றத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளை விதித்து வருகிறார்.

அதிமுக அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு சரியானது. காரணம் ஓ பன்னீர்செல்வம் நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட தற்போது கிடையாது" என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பதில் மனதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி பார்த்தாலும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஓ பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு அல்லது உத்தரவு வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த மனுக்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தலைமை அலுவலகத்தை ஒப்படைக்கப்பட்டதற்கு தாடை விதிக்க வேண்டும் என்ற ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt also against admk ops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->