தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய தடைச் சட்டம்! மீறினால் 3 மாதம் சிறை - ஆளுநர் ஒப்புதல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். கடந்த வாரம் கூட ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொணடார்.

கடந்த 3 வருடங்களாக இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று. பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறன.

இதன் பலனாக கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதும், பின் நீதிமன்றத்தில் அந்த தடை நீக்கப்பட்டதும் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதன் மூலம், தமிழகத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை அமலுக்கு வருகிறது. தடையை மீறி விளையாடினாள் 3 மாதங்கள் சிறை / ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor approves onlinen gambling ban Law


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->