போக்குவரத்து கழங்கங்கள் தொடர்பனாக கோரிக்கைக்கு இணங்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து கழகங்களின் வேறுபாடுகளை தவிர்ப்பதற்கான குழு குறித்து தமிழக அரசு அரசனை ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தினருடன் 6 ஆவது கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 7 மணி நேரம் நடைபெற்றது. 

இதில், போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட விடுமுறைகள், தண்டனைகள் போன்றவற்றில் மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
அதில், தமிழ்நாடு போக்குவரத்து கழக உயரதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டகற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

மேலும், இந்த குழுவில் சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Government order regarding the Committee to Avoid Differences Transport Corporations


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->