அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் எவை., இதுவரை தொகுதி பங்கீடு நிலவரம்.! முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. மே மாதம் 2 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி வருகின்றது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகிவிட்டது. 

மேலும், பாஜக, தேமுதிக, தமாக, புதிய நீதி கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேபோல், திமுக கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும், விசிக-வுக்கு 6 தொகுதிகளையும் ஒதுக்கி ஒப்பந்தம் ஆகியுள்ளது.

மேலும், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. 

மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமக, ஐஜேகே கூட்டணி வைக்கும் என்று தெரிகிறது. ஆம் ஆத்மி தேர்தலில் இருந்து விலகி உள்ளது என்று அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சி 56 வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn election update march 5


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->