படையாட்சியாரின் 103-ஆவது பிறந்த நாள்! தமிழக முதல்வர் போட்ட ட்வீட்டர் பதிவு!  - Seithipunal
Seithipunal


இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், சமூக நீதிக்காக பாடுபட்டவர், நாடாளுமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சருமான திரு.எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், சமூக நீதிக்காக பாடுபட்டவர், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சருமான திரு.எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களின் 103வது பிறந்தநாளில் அவரது சேவையை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM RESPECT TO RAMASAMY PADAYATCHIYAR BIRTHDAY


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal