#BiGBreaking: பாமக போராட்டம் எதிரொலி., சற்றுமுன் தமிழக முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.!
tn cm order dec1
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்து, முதற்கட்டமாக இன்று (01.12.2020) காலை 11.00 மணிக்கு சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வரை சந்தித்த அன்புமணி இராமதாஸ், "தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என்றும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 1989ல் இருந்து இன்றுவரை எந்தெந்த சமுதாயங்களுக்கு எத்தனை இடங்களில் அவர்கள் இட ஒதுக்கீடு விதமாக கடைப்பிடிக்கப்பட்டது என்று அதை அவர்கள் தெரியப்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்து இருந்தார்.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். சாதிவாரியாக தற்போதைய நிலவரப்படியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரித்து ஆணையம் நடவடிக்கைவும் தமிழக முதலமைச்சர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.

