சோகத்தில் மூழ்கிய திமுக எம்.எல்.ஏ., குடும்பம்! உடனடியாக தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதல்வர்!
tn cm mourning to dmk mla son death
கடந்த சில நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய மனைவிக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் முறையான சிகிச்சை பெற்று கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ., மா. சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகனுக்கு கொரோனாத் தொற்று உறுதி படுத்தப்பட்டது. சென்னை கிண்டியில் இருக்கும் கிங்ஸ் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் தீவிர நோய் தாக்கத்தின் காரணமாக இன்று உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், "முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி, சென்னை, சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியனின் இளைய மகன் சு.அன்பழகன் உடல்நல குறைவால் இன்று காலமானதையொட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, ஆறுதல் கூறினார்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn cm mourning to dmk mla son death