விஜயகாந்திற்கு பலர் துரோகம் செய்தனர்... பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்!
TN Assembly Election 2026 premalatha vijayakanth DMDK
வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்டுகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: தேமுதிக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இல்லாத நிலையைக் கொண்டு வருவோம். கட்சியின் வெற்றிக்காக அனைவரும் ஈகோக்களை துறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற ஒற்றுமையே நம்மை வெற்றியடையச் செய்யும்.
விஜயகாந்தின் காலத்தில் அவரை பலர் நம்பிக்கையை தூக்கி வைத்து பின்னர் துரோகம் செய்தனர். ஆனால் பொதுமக்கள் இன்று வரை அவரை நெஞ்சில் வைத்து நினைவிடத்திற்கு வந்து அன்பையும் கண்ணீரையும் சுமந்து செல்கிறார்கள். எம்.பி., எம்.எல்.ஏ. ஆதரவில்லாத நிலையில் கூட மக்கள் நம்பிக்கையோடு நம்மை தேடுகிறார்கள் என்றார்.
மேலும், குடியாத்தத்தில் “மக்களைத் தேடி மக்கள் தலைவன்” என்ற ரதயாத்திரையை தொடங்க இருப்பதாகவும், நடைபயணத்தின் முதல் கட்டம் ஆகஸ்ட் 23-ம் தேதி முடிந்து, 24-ம் தேதி கேப்டனின் நினைவு நாளில் நலத்திட்டங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 25-ம் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளை கட்சித் திருநாளாகக் கொண்டாட, பின்னர் இரண்டாம் கட்ட பிரசாரமும் தொடங்கும் எனவும் கூறினார். கூட்டணிப் பேச்சு அதற்குப் பிறகே அறிவிக்கப்படும் என்றார்.
English Summary
TN Assembly Election 2026 premalatha vijayakanth DMDK