பாஜக ஆளும் 16 மாநிலங்களில் ஏன் பெண் முதல்வர் இல்லை? எதிர்க்கட்சி எம்.பி.,யின் கிடுக்குபிடி கேள்வி! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்த விவாதத்தின் போது  திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெர்ரிக் ஓ.பிரையன் பேசுகையில் நரேந்திர மோடி பதவியேற்ற நாளிலிருந்து பெண்கள் அதிகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அவ்வாறு பேசி வரும் இவர்கள் பாஜக ஆட்சி செய்யும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லாதது ஏன்? மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு பெண்களுக்கு சக்தி வழங்கும் சட்டம் என பெயர் சூட்டும் இவர்கள் பெண்கள் அதிகாரம் அளிக்கும் விவகாரத்தில் அக்கறை இல்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMC MP ask why is there no woman cm in 16 BJP ruled states


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->