காதல் திருமணம் செய்தவர் மர்ம மரணம்.. மனைவி கைக்குழந்தையுடன் புகார்.. திருவள்ளூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


ஆரணி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட வாலிபர் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில், மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அயநல்லூர் கிராமத்தை சார்ந்தவர் சேகர். இவரது மகள் அமுல். இவர் கடந்த 8 வருடமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இரயில் வழியாக சென்னைக்கு வருகையில், ஆரணியை அடுத்துள்ள காரணி கிராமத்தை சார்ந்த மற்றொரு சமூகத்தை சார்ந்த கவுதம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் இவர்களுக்குள் காதலாக மாறவே, கடந்த 2019 ஆம் வருடம் கவுதம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுல் திருமணம் செய்துள்ளார். தம்பதிகள் இருவரும் கடந்த 2 வருடமாக சென்னையில் வசித்து வந்த நிலையில், வார விடுமுறை நாட்களில் கவுதம் தனது தந்தையின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். பிரசவத்திற்காக அமுல் தனது அக்காவின் ஊரான ஆவூருக்கு சென்றுவிட, கடந்த மாதம் அமுலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி கவுதம் இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் அமுலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கவுதமின் சொந்த ஊரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. கவுதமின் பெற்றோருக்கு அமுல் தரப்பு தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய அமுல், தனது கைக்குழந்தையுடன் கணவரின் மரணத்தை மறைத்துவிட்டதாக கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க ஆரணி காவல் நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani Love Married Man Mystery Death Police Investigation


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal