ஆரம்பம்! இம்முறை திமுகவின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம் ...!- குஷ்பூ காட்டம்
time we tear down DMKs veil and shed light people Khushboo Kattam
தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் 'குஷ்பு' அவர்கள் தற்போது அளித்துள்ள ஒரு செய்தியாளர்கள் பெட்டியில் தெரிவித்ததாவது,"மத்திய அரசின் பெண்களுக்கான திட்டங்கள்,விவசாயிகளுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொண்டு வந்துள்ளது

.இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் தலையாய கடமை.ஆனால் ,அது மக்களிடம் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு சேர்க்கிறார்கள். பொதுமக்களிடம் போய் சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை, தி.மு.க.வினர் நடுவில் எடுத்துக் கொள்வதால், சாதாரண மக்களிடம் அதுபோய் சேர்வதில்லை.
ஆகையால்,நாங்கள் மக்களை சந்திச்சுப் பேசப் போறோம்.இன்றைக்கு தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது.கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துல அத்தனை பேர் இறந்து போனாங்க.
அந்த வழக்கு என்னாச்சு? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்னாச்சு?எங்க பார்த்தாலும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை. காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது எதற்குமே பதிலில்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுகிறது.
இம்முறை தி.மு.க.வின் அந்த முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்குப் பயனளிக்காமல், தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிற தி.மு.க.வைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் எங்கள் பணிதான்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
time we tear down DMKs veil and shed light people Khushboo Kattam