நீட் தேர்வை வேரோடு அறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது...! - எக்ஸ் தளத்தில் மு.க.ஸ்டாலினின் கொந்தளிப்பான பதிவு...! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தத் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்றும், அதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அவை மாணவர்களின் சுமையைக் குறைத்தல், கல்வியின் வணிகமயமாக்கலைத் தடுத்தல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் என்பவையாகும்.

ஆனால், இந்த மூன்று அம்சங்களிலும் நீட் தேர்வு தோல்வியடைந்துள்ளது.நீட் தேர்வு, கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மட்டுமே மாற்றியுள்ளது. இதைத் தவிர வேறு எந்தப் பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை என்பது வெறும் நடைமுறைச் சிக்கல் மட்டுமல்ல.

இது கல்வி அமைப்பின் கட்டமைப்புடன் தொடர்புடைய ஆழமான பிரச்சினையாகும். அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் இதனைத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்குப் பிறகாவது மத்திய அரசு விழிப்புணர்வு பெற வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு திறந்த மனதுடன் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பது தேவையற்றது. மாறாக, மாநில அரசுகள் மீதும், மாநிலங்களின் பள்ளிக் கல்வி அமைப்புகள் மீதும், மாணவர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.எனவே, நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க வேண்டிய நேரம் இதுவாகும்" என மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

time come eradicate NEET MK Stalin turbulent post X sit


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->