ஜெயலலிதா உயிரிழந்ததற்கு இது தான் காரணம்?...எஸ்.பி.வேலுமணி உருக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை செம்மஞ்சேரியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் காவல்துறையை மரியாதையாக நடத்தியதாகவும், ஆனால் இப்போது காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று கூறிய அவர், இதன் காரணமாக அதனால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும், பொது மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றும், சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்த போது, என் மீதும் கடம்பூர் ராஜு மீதும் வழக்கு போட்டுள்ளதாக கூறிய அவர், காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்னு கூறினார்.

2011 மற்றும் 2016-ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்த ஜெயலலிதா, தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் எங்களை எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்ததாகவும், அப்போது ஜெயலலிதா அமெரிக்க சென்று சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the reason for jayalalitha death sp velumani meltdown


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->