#தமிழகம் || 10 வயது சிறுமி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை.! ஷேக் தாவூத் என்ற கொடூரன் கைது.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே 10 வயது சிறுமியை வாயை அடைத்து, தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் தாவூத் என்பவனை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர்.

தனியார் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஷேக் தாவூத் என்ற அந்த வாலிபர், சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்றுள்ளான்.

மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய அந்த சிறுமி, அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் அவரின் பெற்றோர் விசாரணை செய்ததில், அந்த சிறுமிக்கு நடந்த கொடுமை தெரியவந்து உள்ளது.

இதனை அடுத்து பெற்றோர்கள் திருவாரூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த ஷேக் தாவூத்தை இன்று போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUVARUR 10 YEAR OLD GIRL ABUSED


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal