விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்; காட்டுமன்னார்கோயிலில் களமிறங்கும் திருமாவளவன்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதாவது, எம்.பி.யாக இருக்கும் அவர் ஏன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிகவுக்கு எட்டுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதன்படி 

விசிகவுக்கு; காட்டுமன்னார்கோயில் (தனி), 
திருப்போரூர், 
பெரியகுளம் (தனி), 
செய்யூர் (தனி), 
அரக்கோணம், 
திண்டிவனம் (தனி), 
கள்ளக்குறிச்சி (தனி), 
பண்ருட்டி ஆகியவை உள்ளன.

இதனைத் தொடர்ந்து விசிகவில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வீடியோ கன்ஃப்ரன்ஸ் மூலம் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் நேர்காணல் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்று விசிக சார்பில் போட்டியிடும் எட்டு வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். 

அதன்படி, 
காட்டுமன்னார்கோயில் – திருமாவளவன், 
திண்டிவனம் – வன்னியரசு, 
செய்யூர் - சிந்தனைச் செல்வன், 
திருப்போரூர் – பன்னீர்தாஸ், 
பெரியகுளம் - ஆற்றல் அரசு, 
கள்ளக்குறிச்சி – மாலதி, 
அரக்கோணம் - எழில் கரோலின், 
பண்ருட்டி - அப்துல் ரகுமான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் காட்டுமன்னார்கோயில் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், அந்தத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan Enters the Fray in Kattumannarkoil on Behalf of the VCK


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->