ஆளுநர் ஆர்.ஏன் ரவி 100% வடிகட்டிய.. பித்து பிடித்த..! இறங்கிய அடிக்கும் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ரவி எப்போதும் தன் பேச்சால் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் படிக்கும் போது ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்து கை கால்களை அழுத்திவிட்டு கல்வி கற்றதாகவும், இது போன்ற பாரம்பரியங்கள் தற்போது குறைந்து கொண்டு வருவதாகவும் பேசி இருந்தார். அவரின் இத்தகைய பேச்சுக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தது.

இந்த நிலையில் சென்னையில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் ஆளுநரின் இத்தகைய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர் "நீண்ட நெடுங்காலமாக இந்த மண்ணில் நிலைத்திருக்கக் கூடிய பழமை வாதத்தை, மூடநம்பிக்கையை சமூகம் அப்படியே பின்பற்ற வேண்டும், இழி தொழில்களை, குலத் தொழில்களை அப்படியே பாதுகாக்க வேண்டும், என்கிற ஒரு நூறு விழுக்காடு வடிகட்டிய சனாதனி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி.

அவர் ஜமகாலத்தால் வழிகாட்டப்பட்ட ஒரு சனாதனி. மூச்சுக்கு 300 முறை சனாதனத்தை பற்றி பேசக் கூடியவராக இருக்கிறார். வள்ளலார் சனாதனம் பேசியதாக சொல்கிறார், திருக்குறளை சனாதன நூல் என சொல்கிறார். அவர் ஒவ்வொரு நாளும் உளறிக் கொண்டிருக்கிறார். சனாதன பித்து அவரை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவரின் இந்த கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக எதிர்க்கிறது கண்டிக்கிறது'' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan criticized TamilNadu governor ravi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->