ஆளுநரின் செயல்பாடு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளது.. திருமாவளவன் கடும் விமர்சனம்.!!
Thirumavalavan criticized Governor perform like that mentally ill person
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து இலக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அறிவித்துள்ளார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் நீதிமன்ற காவலில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் அவர் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடித்தால் வழக்குகளின் விசாரணை மற்றும் அரசு இயந்திரம் சரி வர நடைபெறாது.
செந்தில்பாலாஜி அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடும். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அறிவித்துள்ளார்.

ஆளுநரின் இத்தகைய செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தோடு, கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆளுநர் #ஆர்_என்_ரவி அவர்களின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது.
அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா? அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Thirumavalavan criticized Governor perform like that mentally ill person