டாஸ்மாக்கை மூட தைரியம் இல்லை... மதுவிலக்கு நாடகம் நடக்கிறது...! - தமிழிசை சவுந்தரராஜன்
They lack courage close down TASMAC drama prohibition being enacted Tamilisai Soundararajan
திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,“புதுக்கோட்டை இன்று விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
அரசியல் போர்க்களத்தில் ‘ஜார்ஜ் கோட்டை’யை கைப்பற்றும் வியூகத்தை அமைக்க அமித்ஷா வருகிறார். வெற்றி நிச்சயம். மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களுக்கு விரைவில் முடிவு வரும்” என்றார்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் குறித்து பேசிய அவர்,“இது பழையதா, புதியதா என்பதே தெளிவில்லாத குழப்பமான அறிவிப்பு. தேர்தல் ஸ்டண்ட் தான். உண்மையான ஓய்வூதியத் திட்டமா என்ற கேள்விக்குறி மக்களிடம் உள்ளது” என விமர்சித்தார்.
மேலும், “பெயரை மாற்றி திட்டங்களை சுருக்குவது தான் இந்த அரசின் வேலை. பழைய ஓய்வூதியத் திட்டம் போல காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்” என்றார்.மத்திய நிதி விவகாரத்தில்,“மத்திய–மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும்.
துப்புரவு பணியாளர்களை தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.மதுவிலக்கு அரசியலை விமர்சித்த தமிழிசை,“மது ஒழிப்பு போராட்டம் அறிவாலயத்தை நோக்கி செல்ல வேண்டும்.
டாஸ்மாக்கை மூட தைரியம் இல்லாத அரசு பொய் நாடகம் நடத்துகிறது” என்றார்.லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்தும்,“தமிழரான சிவ நாடாரின் நிறுவனத்தை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களை தேர்வு செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
கோவில் விவகாரத்தில்,“கோவில்கள் பொதுமக்களின் சொத்து. யாருக்கும் தனிச்சொத்து இல்லை. தி.மு.க. கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற’ என்ற பெயரை வைக்க தார்மீக உரிமை இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
English Summary
They lack courage close down TASMAC drama prohibition being enacted Tamilisai Soundararajan