தலைமைச் செயலாளர் மாற்றம் குறித்து பரபரப்பு... அமைச்சர் ஷாஜகான் வெளியிட்ட முக்கிய தகவல் என்ன...?
There stir regarding change Chief Secretary What important information released by Minister Shahjahan
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலாளர் மாற்றம், வக்பு சொத்துகள் மீட்பு மற்றும் சிறுபான்மையினருக்கான புதிய திட்டங்கள் குறித்து விரிவாக தெரிவித்தார்.தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுக்குச் சொந்தமான சில சொத்துகள் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த சொத்துகளை மீட்டு மீண்டும் சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இருப்பினும், அவற்றை சட்டரீதியாக மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்கப்படும் சொத்துகள் உரிய வக்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
வருகிற 27-ந்தேதி சட்டசபையில் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதுடன், தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள் செயல்பாடு குறித்து கேட்கிறீர்கள்.
லஞ்சம், ஊழலுக்கு இடமில்லாத வகையில் ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மேலும் 6 மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசின் நிர்வாகப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவே நாங்கள் பார்க்கிறோம். அதேநேரத்தில், தலைமைச் செயலாளர் பா.ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டவர் என்ற கருத்தை முன்வைத்து சில அரசியல் கட்சிகள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.
தலைமைச் செயலாளர் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் முழுமையாக ஆய்வு செய்து, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின்னர் உரிய முடிவை எடுப்பார்.இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
English Summary
There stir regarding change Chief Secretary What important information released by Minister Shahjahan