கொலைக்கு இடமில்லை, சமத்துவத்திற்கே இடம்! ஆணவப் படுகொலைகளுக்கு சட்டம் கொண்டு வருவோம்...! -ஸ்டாலின் உறுதி
There no place for murder only equality We bring law against honor killings Stalin assures
தமிழ்நாடு சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் தனித்த சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என அறிவித்தார்.மேலும்,நிதி மானிய விவாதத்தின் போது உரையாற்றிய அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என வள்ளுவர் சொன்னது தமிழரின் அடையாளம்.

சாதி வேற்றுமை நமது சமுதாயத்தில் வேரூன்றியுள்ளதே துயரமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,"ஆணவப் படுகொலைகள் நாகரிக சமுதாயத்திற்கு களங்கம். எதற்காகவும் மனித உயிர் பறிக்கப்படக் கூடாது.
குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்; எந்தவொருவரும் தப்ப முடியாது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அந்த ஆணையம் சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து பரிந்துரைகள் அளிக்கும்.
“அந்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் தனிச்சட்டம் உருவாக்கப்படும்,” என உறுதியளித்தார் மு.க.ஸ்டாலின்.சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவை தமிழ்நாட்டு ஆட்சியின் அடிப்படை என்று வலியுறுத்திய அவர், “சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதே நமது குறிக்கோள்” என்று தெரிவித்தார்.
English Summary
There no place for murder only equality We bring law against honor killings Stalin assures