விஜய் சேதுபதி எனக்கு ஜூனியர்..சீனியர்.விஜய் சேதுபதி கண்டசன்ட்நோஸ் கட் பண்றதுலயே இருக்காதீங்க!” – பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிரவீன் காந்தி அதிரடி தாக்கு!
Vijay Sethupathi is my junior senior Vijay Sethupathi donot just cut your nose with a condenser Praveen Gandhi who came out of Bigg Boss attacks
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பமாகி இன்னும் சில வாரங்களே ஆகிறது. ஆனால் இதற்குள் வீட்டுக்குள் டிராமா, சண்டை, உணர்ச்சி — எல்லாமே கலவையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இயக்குநர் பிரவீன் காந்தி எவிக்ட் ஆனார். வீட்டிலிருந்து வெளியே வந்த அவர், பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அவற்றில் சமீபத்திய பேட்டியில் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது நேரடியான தாக்குதலை நடத்தி இருக்கிறார்.
2017ஆம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களுக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். எட்டாவது சீசனிலிருந்து அந்த பொறுப்பு விஜய் சேதுபதி கையில் வந்தது. தனது சொந்த பாணியிலும், நேர்மையான அணுகுமுறையிலும், “கண்டிப்பாகவும், கலந்துரையாடும்” ஸ்டைலில் சேது இந்த சீசனில் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறார்.
முதல் வாரத்திலிருந்தே அவர் காட்டிய அதிரடி ரசிகர்களிடையே பேசுபொருளானது. துஷாரிடம் “கட்டிப்பிடிக்கலாமா?” என்று கேட்டபோது தூரமாக சென்றது, திவாகருக்கு உணர்ச்சி கலந்த அட்வைஸ் கொடுத்தது, ஆதிரையின் பெயரை சொல்லாததைக் கேட்டு உறுதியான ரியாக்ஷன் அளித்தது — எல்லாமே சேதுவின் புது ஸ்டைல் என்று சொல்லலாம்.
இந்நிலையில் வெளியேறிய பிரவீன் காந்தி, சமீபத்தில் அளித்த பேட்டியில் கடும் விமர்சனத்துடன் கூறியுள்ளார்:“விஜய் சேதுபதி எனக்கு சினிமாவில் ஜூனியர். ஆனால் பிக்பாஸில் சீனியர். அதனால்தான் அவரை எதிர்த்து பேச முடியவில்லை. அவரிடம் சண்டை போட்டால் கலீஜாகிடும்.
அவர் பேசிக்கொண்டே இருப்பார், மற்ற போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே மாட்டார்.கமல்ஹாசன் சார் இருந்தபோது எல்லாரும் பேச வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சேது ‘நான் சொல்வது தானே சரி’ என்ற மனநிலையில்தான் இருக்கிறார்.குறைந்தது இனிமேல் அவர்களைக் பேசவிடுங்கள், எவரையும் நோஸ் கட் பண்ணாமல் இருக்கணும்” என்றார்.
அவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிலர் “பிரவீன் காந்தி உண்மையை சொன்னார்” என்று ஆதரிக்க, மற்றொரு பக்கம் சேது ரசிகர்கள் “அவரின் பேச்சு நேர்மையாக இருந்ததுதான் காரணம்” என்று பாதுகாத்து வருகின்றனர்.
இதோடு, இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பொம்மைகள் டாஸ்க், ஆதிரா-எஃப்ஜே உரையாடல், திவாகரின் விமர்சனங்கள் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு சேது எப்படி ரியாக்ட் பண்ணப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக உள்ளது.
விஜய் சேதுபதி இந்த விமர்சனங்களுக்கு என்ன பதில் தரப்போகிறார் என்பதுதான் இப்போது பிக்பாஸ் வட்டாரத்தின் ஹாட் டாபிக்!
English Summary
Vijay Sethupathi is my junior senior Vijay Sethupathi donot just cut your nose with a condenser Praveen Gandhi who came out of Bigg Boss attacks