'காவல்துறையின் நிபந்தனைகள் மீறவில்லை': அடுத்த வாரம் விஜய் பரப்புரை மேற்கொள்வாரா..? தவெக வக்கீல் பேட்டி..!
The TVK Party did not violate the polices conditions says the party lawyer
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அங்கு விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 08 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வக்கீல் அறிவழகன் பேட்டியளித்து கூறியுள்ளதாவது:

'கரூரில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட குளறுபடியால் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தி தலைவர் விஜய்யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது. விஜய் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கக்கூடியவர். இந்தக் கோரமான சம்பவம் அவர் மனதை பலமாக பாதித்திருக்கிறது. விஜய் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்.
அடுத்த வாரம் பரப்புரை மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து விஜய் தெரிவிப்பார். காவல்துறையின் நிபந்தனைகளை தவெக பின்பற்றி இருக்கிறது. ஒரு நிபந்தனையை கூட மீறவில்லை.' என்று பேட்டியளித்துள்ளார்.
English Summary
The TVK Party did not violate the polices conditions says the party lawyer