கரூர் துயரம்: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு: தவெக அனுமதி கேட்ட இடம் குறித்து பொறுப்பு டிஜிபி பேட்டி..!
Interview with DGP in charge regarding the place where TVK sought permission
தவெக விஜய் அவர்களின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்த சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 05, பெண் குழந்தைகள் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தவெகவினர் முதலில் அனுமதி கேட்டது லைட்டவுஸ் ரவுண்டான மற்றும் உழவர் சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக அனுமதி கேட்டார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். ஏற்கனவே கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தாகவும், ஆனால், மதியம் 03 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 07.50 மணிக்குதான் வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவெக கட்சி தலைமையின் டுவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கியதாகவும், ஆனால் விஜய் 07.50 மணிக்குதான் வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறதாகவும், விசாரணை முடிவில் காரணம் தெரிய வரும் என்று பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் அந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் அரச மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ஏனைய மேல் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிகிச்சை பலனின்றி தற்போது 39 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 35 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து கார் மூலமாக கரூர் சென்று அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசுஉள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
English Summary
Interview with DGP in charge regarding the place where TVK sought permission