விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: 04 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
Police register cases in 04 sections regarding Karur stampede incident
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அங்கு விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 08 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கட்டுக்கடங்காமல் கூடியிருந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முதற்கட்டமாக போலீசார் கொலையாகாத மரணம், மரணம் விளைவிக்கும் செயல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 04 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறித்த வழக்குகள் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதியழகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கரூரில் இருந்து சென்னை திரும்பிய தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Police register cases in 04 sections regarding Karur stampede incident