சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினி வழங்கிய தமிழக அரசு..!
The Tamil Nadu government has provided laptops to 1520 medical college students in Chennai
''உலகம் உங்கள் கையில்'' எனும் திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை. இராஜா அண்ணாமலை மன்றத்தில், "உலகம் உங்கள் கையில்" எனும் திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கியுள்ளனர்.
"உலகம் உங்கள் கையில்" எனும் திட்டத்தின் மூலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் கலை. அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு ரூ.2,172 கோடி மதிப்பீட்டில் 10 இலட்சம் மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தினை கடந்த 05.01.2026 அன்று சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 05 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம். துணை சுகாதார படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் பயிலும் 1,520 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
English Summary
The Tamil Nadu government has provided laptops to 1520 medical college students in Chennai