எடப்பாடி வயிற்றில் பாலை வார்த்த நயினார்!எடப்பாடியாரின் ரூட் கிளீயர்..! உடைத்த பேசிய நயினார் நாகேந்திரன்..!
The Nayinar who poured milk into Edappadi stomach The root cleaner of Edappadi The Nayinar Nagendran who spoke out
அதிமுக–பாஜக இடையே கூட்டணி அமைந்தாலும், கடந்த சில மாதங்களாக “முதல்வர் வேட்பாளர் யார்?”, “யார் தலைமையில் கூட்டணி?” என அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்தன.
எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையில்தான் கூட்டணி நடைபெறும்; நான் தான் முதல்வர் வேட்பாளர்” என வலியுறுத்தி வந்தார். அதேசமயம், பாஜக தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தலைமையில்தான் கூட்டணி இருக்கும் எனக் கூறி வந்தனர். இதனால் கூட்டணித் தலைமையில் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, “தமிழகத்தில் NDA ஆட்சி அமையும்; எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்” என முன்பே தெளிவுபடுத்தியதாக தகவல்கள் வெளியானது. அதன்பின் நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது NDA தொண்டர்களின் கடமை” என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,“தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவரும், முதல்வர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமிதான். தேர்தல் முடிந்த பிறகு எப்படித் தீர்மானிக்கிறார்களோ அதுதான் நடைமுறைக்கு வரும். இதனால் யாருக்கும் மன வருத்தமில்லை. இனிமேல் யார் முதல்வர் வேட்பாளர் என கேள்வி எழுப்பவேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார்.
அதேவேளை, திமுக அரசை கடுமையாக விமர்சித்த அவர்,“திமுகவில் ‘B-டீம்’ போல பலர் உள்ளனர். இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பது எங்கள் நோக்கம். பிரதமர் இனி அடிக்கடி தமிழகம் வருவார். திமுக ஆட்சி மக்கள் மனதில் சலிப்பை ஏற்படுத்தி விட்டது. 2026ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்” என்று கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், எதிர்வரும் தேர்தலில் NDA-வுடன் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். மேலும்,“தமிழகத்தில் பலமான கூட்டணிதான் வெற்றி பெறும் என்கிற கட்டாயம் கிடையாது. 1991, 2006 தேர்தல்கள் அதற்கு உதாரணம். அப்போது பலமான கூட்டணியாக இருந்தாலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆகையால் 2026 தேர்தலில் திமுக வீடு திரும்பும்”
என்றும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
The Nayinar who poured milk into Edappadi stomach The root cleaner of Edappadi The Nayinar Nagendran who spoke out