கல்லா கட்டும் திமுக! ரூ.2,000 டிக்கெட் விற்பதை தடுக்க முடியாதவர்களுக்கு ஆட்சி எதற்கு? பாஜக, நாதக தரப்பில் பதிலடி! - Seithipunal
Seithipunal


தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு 2,000 ரூபாய்க்கு டிக்கெட் விற்பவர்களா? நாட்டை காப்பார்கள்? என்று, தவெக தலைவர் விஜயை, திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம் செய்திருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி, முதல் நாள் காட்சிக்கு 2,000 ரூபாய்க்கு டிக்கெட் விற்பதை தடுக்க முடியாதவர்கள் நாட்டை ஆள்வதா? என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி தெரிவித்துள்ள பதில் கருத்தில், "திரைப்படங்கள் கலையின் ஒரு வடிவம் என்று கூறப்பட்டாலும், அவை முழுக்க முழுக்க வணிகநோக்கம் கொண்டவைதான்! அதனால், திரைப்படங்களைப் பார்ப்பதற்கான சீட்டுகளை இலவசமாகக் கொடுக்க வேண்டுமென ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. 

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வலியுறுத்துவதுதான் சரியாக இருக்கும். இருந்தபோதிலும், திரைப்படத்தின் சீட்டுகளை இலவசமாகக் கொடுப்பார்களா? எனக் கேட்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

தேர்தலில் சொந்தக்கட்சியினர் போட்டியிட பெறும் விருப்ப மனுவை 52,000 ரூபாய்க்கு விற்ற கட்சியில் இருந்துகொண்டு இதனைப் பேசலாமா? 2019ஆம் ஆண்டு 25,000 ரூபாயாக இருந்த திமுகவின் விருப்ப மனு, 2024ஆம் ஆண்டு 52,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. திரைப்படச் சீட்டுகளை இலவசமாக வழங்கக்கோரும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விருப்பமனுவைக் கட்சியினருக்கு இலவசமாக வழங்க திமுகவின் தலைமையிடம் கோரிக்கை வைக்கலாமே!

கட்சியினருக்கான விருப்பமனு முதல் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வரை எல்லாவற்றையும் விற்று கல்லா கட்டும் கட்சியில் இருந்துகொண்டு நீங்களெல்லாம் பேசலாமா அமைச்சரே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The GOAT TVK Vijay DMK Minister BJP NTK


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->