அதிமுக கூட்டணியில் தேமுதிக..! இறுதிக்கட்ட ரகசியப் பேச்சு: பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில்... தயாராகும் மதுரை...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் திமுக, அதிமுக, தவெக (விஜய்) மற்றும் நாதக (சீமான்) என நான்கு முனைப் போட்டியால் ரணகளமாகியுள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகளைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாஜக, பாமக, அமமுக மற்றும் தமாகா ஆகிய கட்சிகள் உறுதியாக உள்ளன. இருப்பினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது 'யார் பக்கம்?' என்ற ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

அனல் பறக்கும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை:

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுடனும் தேமுதிக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், எந்தப் பக்கம் சாயும் என்பதில் மர்மம் நீடிக்கிறது.

தேமுதிகவை எக்காரணம் கொண்டும் கூட்டணியை விட்டு வெளியேற விடக்கூடாது எனத் தமிழக பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா 'கெடு' விதித்துள்ளார்.

வரும் மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த்தை மேடை ஏற்றித் தங்களது பலத்தை நிரூபிக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

ஏற்கனவே மதுராந்தகம் கூட்டத்தில் பிரேமலதா வருவார் என எதிர்பார்க்கப்பட்டுத் தொகுதிப் பங்கீடு இழுபறியால் தடைபட்டது. தற்போது அடுத்த இரண்டு வாரங்களுக்குள் டீல் முடிவாகுமா? அல்லது 'கேப்டன்' கட்சி வேறு திசையில் பாயுமா? என்பதே தற்போதைய ஹாட் டாபிக்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The DMDK Dilemma Will Premalatha Share the Stage with PM Modi in Madurai


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->