தொகுதி எல்லை கூடத் தெரியாத அளவுக்கு முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு; அமைச்சர் ஸ்ரீநாத்தை விமர்சித்துள்ள அதிமுக..!
The AIADMK has criticized Minister Srinath stating that he does not even know the boundaries of his constituency
தவெக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் ஸ்ரீநாத். தவெக ஆட்சியில் அவருக்கு மீன்வளத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ''தனது தொகுதி எல்லை கூடத் தெரியாத அமைச்சர்கள் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு'' என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு'' என விமர்சித்துள்ளது.
English Summary
The AIADMK has criticized Minister Srinath stating that he does not even know the boundaries of his constituency