இன்ஸ்டாவில் வைரலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி; மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்; 03 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்..! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது வேலையில்லாதவர்களை கரப்பான் பூச்சிக்கு ஒப்பிட்டு பேசியிருந்த கருத்துகள் சர்ச்சை ஆனது. அதன் பின்னர் அபிஜீத் திப்கே என்பவர் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி; என்ற பக்கத்தைத் தொடங்கினார். 

இந்த பக்கத்தில் அரசுக்கு எதிரான பதிவுகள் மற்றும் சில வேடிக்கையான பதிவுகளும் இடப்பட்டன. இந்த பக்கம் வைரலான நிலையில் அதனை பலரும் பின்தொடரத் தொடங்கினர். ஒருகட்டத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. 

இதனால், மத்திய அரசு அந்த பக்கத்தை முடக்கி தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப் பக்கம் தொடங்கப்பட்டு, அந்தப் பக்கமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் புகழ்பெற்ற 'கரப்பான் ஜனதா கட்சி', இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு முன்னதாக, தனது அமைப்பை விரிவுபடுத்த மூன்று புதிய செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளது. 

அதன்படி, புலனாய்வு பத்திரிகையாளர் சௌரவ் தாஸ் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், திரைப்பட இயக்குநர் விஜேதா தஹியா மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் செய்ய வலியுறுத்தி, ஜூன் 06க்குப் பிறகு டெல்லியில் அமைதிப் போராட்டம் நடத்த இக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டமிட்டுள்ளார். 

தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இந்தியாவில் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், அக்கட்சியின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டு வருகின்றன குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 Spokespersons Appointed in the Cockroach Janata Party


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->