தமிழக சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டத்துறை செயலாளராக இருந்து வந்த ஜார்ஜ் அலெக்சாண்டர் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்தப் பொறுப்பிற்கு ப. சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு சட்டத்துறை செயலாளராக முதல் பெண் எனும் கௌரவத்தையும் பெற்றுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது;

''சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார். அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப. சுமதி, 02.06.2026 முதல் சட்டத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தின் மூலம், ப.சுமதி சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Sumathi Appointed as the First Woman Secretary of the Tamil Nadu Law Department


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->