சென்னை: கும்பலாக சுத்துவோம்., போலீசை பார்த்த ஓடுவோம்.! பட்டாகத்தி திருட்டு புல்லிங்கோக்களை விரட்டி பிடித்த எஸ்ஐ.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் பட்டா கத்தியை உடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரம் பகுதி அருகே பட்டாகத்தியுடன் சுற்றி வைத்திருந்த இளைஞர்களை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை விரட்டி சென்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இன்றுகாலை காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கும்பலாக நின்று கொண்டிருந்த இளைஞர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக உதவி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், காவல் துறையினர் உதவியுடன் இளைஞர்களை விரட்டி சென்று பிடித்த போது, இளைஞர்களில் ஒருவர் வயிற்றில் ஒன்றரை அடி நீளமுடைய பட்டாக்கத்தி ஒன்றை சொருகி இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நான்கு இளைஞர்களையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஒரு இளைஞரை தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்கள் சம்பந்தமாக வழக்குகள் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இந்த நான்கு இளைஞர்களிடமும் கத்தி, மாத்திரை, போதை ஊசி உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thamparam pullinko arrested


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal