பாஜக 40 சீட் கூட கேட்கலாம்.. முடிவு இபிஎஸ் எடுப்பார்.! - அதிமுக எம்.பி தம்பிதுரை..!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர் சேகர் "பாஜக வாங்கும் இடத்திலும் இல்லை, அதிமுக கொடுக்கும் இடத்திலும் இல்லை. பாஜக-அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி. இல்லையேல் தனி கூட்டணி" என சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் அதிமுக தரப்பில் இருந்து எதிர்வினை இருக்கும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "கர்நாடகா மாநில சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான நிகழ்வு. தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கடுமையாக கண்டிக்கிறது.

தேர்தல் கூட்டணியில் இருப்பவர்கள் சீட் அதிகமாக தான் கேட்பார்கள். கொடுப்பது அதிமுக தான். எங்கள் தலைமையில் இருக்கும்போது நாங்கள் தான் கொடுக்க வேண்டும். கேட்பவர்கள் 40 தொகுதிகளையும் கூட கேட்கலாம், அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு கொடுக்க வேண்டும் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்த பின் முடிவு செய்வார்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thambidurai said that EPS will decide on the seat allocation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->