தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: படிவங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி (SIR) தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இத்தகைய பணி நடப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீவிரத் திருத்தப் பணியின் நோக்கம்: 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது. இறந்த வாக்காளர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவில் உள்ளவர்களை நீக்குவது.

காலக்கெடு நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த களப்பணிகளின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கினர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று இணையதளத்தில் பதிவேற்றும் பணி முதலில் டிசம்பர் 4ஆம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தக் காலக்கெடு டிசம்பர் 11ஆம் தேதி வரையிலும், பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கை:
வாக்காளர்களுக்குக் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, அவற்றைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (டிசம்பர் 14) முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu SIR Election Commission 


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->