எம்.ஜி.ஆர் காரில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்யும் நயினார் நாகேந்திரன்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது முதலே அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப் பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் உள்ளிட்டவற்றை தொடங்கிவிட்டன. 

திமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த இரு மாதங்களாக தனது தேர்தல் பயணத்தை தொடங்கி உள்ளார். இதற்கிடையே கட்சியின் நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் பேசும் ‘உடன் பிறப்பே வா’, ‘ஓரணியில் தமிழ்நாடு’ உள்ளிட்ட தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

மறுபுறம் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து, தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு தயாராகியுள்ள நயினார் நாகேந்திரன் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் பதிவெண்ணிலேயே பிரேத்யேகமாக வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அதாவது, அரியலூர் மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் ஐயப்பன், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரச்சார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக பிரத்யேகமாக தயார் செய்துள்ளார். இந்தக் காரின் எண் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் எண் என்பதை அறிந்தவுடன், நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அவரே வாகனத்தை இயக்கி திருநெல்வேலி மாநகரை வலம் வந்துள்ளார். 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான நயினார் நாகேந்திரன் அதிமுகவின் மூலம் அரசியல் அடையாளம் பெற்றவர். வரும் 17 ஆம் தேதி நெல்லையில் தனது தேர்தல் பயணத்தை தொடங்கும் நயினார் நாகேந்திரன் அனைத்து தொகுதிகளிலும் எம் ஜி ஆர் ஸ்டைலில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu bjp leader nainar nagendran election campaign


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->