என்னடா இது வாழ்க்கை..!! லிப்டில் போனா கூட பாதுகாப்பு இல்ல..!! மா.சுப்பிரமணியனை கலாய்த்த தமிழிசை..!! - Seithipunal
Seithipunal


சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்ட துவக்க விழாவிற்கு கடந்த நவம்பர் 29ஆம் தேதி சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து லிப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன் ஆபத்து கால கதவின் வழியே அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் பொறியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

இதனிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கிக்கொண்டதை கிண்டல் செய்யும் வகையில் பேசி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "முன்பெல்லாம் விமானத்தில் சென்றால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம். 

பிறகு காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என்று நினைப்போம். இப்பொழுது லிட்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் போது என்னடா இது வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றுகிறது. எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை" என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai teased Subramanian who was stuck in Lift


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->