தமிழிசை குறித்து அவரது கணவர் சவுந்தர்ராஜன் கூறிய அந்த ஒரு வார்த்தையால்., வெட்கத்தில் நெளிந்த தமிழிசை!!
tamilisai and soundararajan share about their life
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை மட்டும் அவரது கணவர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது திருமண வாழ்க்கை குறித்து உரையாடினார்.
முதலில் பேசிய சவுந்தரராஜன், " எனது உயிரே தமிழிசை தான். இதை தான் புகழாரமாக கூறவில்லை. எனது இதயத்திலிருந்து கூறப்பட்ட வார்த்தைகள். எங்களுக்கு திருமணமான சமயத்தில் தமிழிசை ஒரு மருத்துவ மாணவி.
அப்போது அவர், இளமையுடனும், துடிப்புடனும் இருப்பார். மேலும், குழந்தைதனம் மற்றும் அப்பாவித்தனம் போன்றவை நிறைந்தவர். நான் அப்போது மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் தருவாயில் தான் அவர் எனக்கு மனைவியாக அறிமுகம் ஆனார்.
திருமணமாகி மூன்று மாதங்களில் என்னை எனது மாமனார் கிராமங்களில் பனியாற்ற கூறினார். நான் தமிழிசைக்கு மருத்துவம் குறித்து பாடம் எடுத்துள்ளேன். எங்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. எனது பயோ டேட்டாவை பார்த்து தான் எனக்கு பெண்ணே கொடுத்தார்கள். " என கூறியுள்ளார்.
"எனது உயிரே தமிழிசை தான்"என சவுந்தரராஜன் கூறியதால் வெட்கத்தில் தமிழிசை பேச்சற்று மகிழ்ந்திருந்ததை காண முடிந்தது.
English Summary
tamilisai and soundararajan share about their life