11.19% வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு...! ஆனால் மத்திய அரசு வஞ்சனை தொடர்கிறது...! -தங்கம் தென்னரசு தாக்கு
Tamil Nadu grown by 11POINT19 central government continues to cheat Gold attacks southern state
தமிழக சட்டசபையில் 2025–26 கூடுதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.“தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. இது திமுக அரசின் திட்டமிட்ட முயற்சியின் பலன்” என்றார் அவர்.

ஆனால், மத்திய அரசு நிதி பகிர்வில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார். “கல்விக்கான நிதியை கூட போராடிப் பெற வேண்டிய நிலை. 4,000 கோடி ரூபாய் வழங்காமல், வெறும் 450 கோடி ரூபாயை மட்டும் விடுவித்துள்ளது,” என தெரிவித்தார்.
“மத்திய நிதி மறுக்கப்பட்டாலும், எந்தக் குழந்தையின் கல்வியும் நின்றுவிடக்கூடாது என்ற உறுதியுடன் முதல்வர் மாநில நிதியிலிருந்து பணத்தை வழங்கினார்,” என தங்கம் தென்னரசு பாராட்டினார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,"கல்வி அரசியல் விளையாட்டு அல்ல; அது ஒரு சமூகப் பொறுப்பு. மத்திய அரசு தருவது உதவி அல்ல, அது எங்கள் உரிமை. அந்த உரிமைக்காக நாங்கள் கடைசி வரை போராடுவோம்" என்று தெரிவித்தார்.
English Summary
Tamil Nadu grown by 11POINT19 central government continues to cheat Gold attacks southern state