ஆர். நல்லக்கண்ணு மறைவு: அரசியல் உலகம் துயரம்...! - வைரமுத்து உருக்கமான இரங்கல் பதிவு!
R Nallakannu passes away political world mourning Vairamuthu heartfelt condolence post
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவராக விளங்கிய ஆர். நல்லக்கண்ணு, உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அவரின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில்,
தோழர் நல்லகண்ணு
மறைந்துவிட்டார்
சிவப்புக் கட்சியின்
கறுப்பு காந்தி இறந்துவிட்டார்
எழுந்தாலும் விழுந்தாலும்
கடலின் புகழ்பாடும் அலைபோல,
கம்யூனிஸ்ட் கட்சியின்
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
செங்கொடி சுமந்த
சிங்கம் அவர்
கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும்
கம்யூனிஸ்ட் கட்சியின்மீது
கொண்டிருக்கும் மதிப்புக்கு
நல்லகண்ணுவின்
வாழ்க்கைமுறை ஒரு காரணம்
சுதந்திர இந்தியாவில்
தடைசெய்யப்பட்ட
கம்யூனிஸ்ட் கட்சி
இன்றுவரை
உயிர்ப்போடு இருப்பதற்கு
நல்லகண்ணு போன்றோரின்
தியாகமே காரணம்
செயற்கை நுண்ணறிவு
எதிர்காலத்தில்
இறந்தவர்களை மீட்டுருவாக்கும்
தொழில்நுட்பம் கண்டறிந்தால்
நல்லகண்ணுவின் மீட்பையே
நாடு கேட்கும்
அவர் வாழ்ந்தது
ஒரு நூறாண்டு;
அவரை மறக்காது
இந்த நூற்றாண்டு
அவருக்கு
என் செவ்வணக்கம்,
என மனவேதனையுடன் தனது அஞ்சலியை பகிர்ந்துள்ளார்.
English Summary
R Nallakannu passes away political world mourning Vairamuthu heartfelt condolence post