அரசியல் உலகில் துயரம்! சிகிச்சை பலனின்றி மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


ஆர். நல்லகண்ணு என்னும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால், மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்ததால் பிற்பகல் 1.55 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy political world Senior communist leader R Nallakannu passes away lack treatment


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->